Thursday, October 05, 2006

இருபாலீர்ப்பு - ஒரு அறிமுகம்

இருபாலீர்ப்பு - ஒரு அறிமுகம் மற்றும் சில தவறான கண்ணோட்டங்கள்.

  • இருபாலீர்ப்பு என்றால் என்ன?

    இருபாலார் மீதும் ஏற்படும் ஈர்ப்பு/பாலுணர்ச்சியே இருபாலீர்ப்பு.இது ஒரே நேரத்தில் ஏற்படும் என்று அல்ல.இந்த ஈர்ப்பு ஒருவரின் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டத்தில் மாற்றம் ஏற்படலாம்..
  • இருபாலீர்ப்பு உள்ளவர்கள் ஒருதாரம் என்ற அடிப்படை கோட்பாடை தகர்க்கிறார்களே?

    ஈர்க்கப்படும் அடிப்படை தன்மை/உணர்ச்சி வேறு, நடவடிக்கை , நடைமுறை என்பது வேறு. எதிர்பால் உறவு, ஒரின உறவு என்று பல உறவுகளில்,ஜோடிகளில் இது போன்ற இருபாலீர்ப்பாளர்களைக் காணலாம்.இருபாலீர்ப்பாளர் என்றாலே பல-தாரம் என்ற முடிவுக்கு வருவது மிகத்தவறு.ஒரே வாழ்க்கைத்துணையுடன் நீண்ட நாள் வாழும் இருபாலீர்ப்பாளரும் உண்டு.சிலர் serial monogamy (தொடர்ச்சி-ஒரு தாரம்) போன்ற வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பர்.ஆண்-பெண் உறவில் இருப்பது போலவே பல-தாரம் (polygamy) வாழ்க்கை முறையைக் கடைபிடிப்போரும் உண்டு.இது ஒருவருக்கொருவர் வேறுபடும்.
  • இவர்கள் குழம்பியவர்கள்.எந்த கட்சி என்று சேரமுடியாமல் முடிவுக்கு வரமுடியாமல் தவிப்பவர்கள்.

    இவர்கள் வாழ்க்கைத்துணையைத் தேடுகையில் பால் என்ற பாகுபாடின்றி தேடுவதே அன்றி உணர்ச்சி அளவில் எல்லோரையும் போலத்தான்.பாலுணர்வு, நாட்டம் எல்லாம் ஒருவரின் வாழ்க்கையில் மாற்ற்ம் இல்லாமல் இருப்பதில்லை என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். வாழ்க்கையின் மாற்றங்களோடு இவ்வுணர்வுகளும் மாறலாம்.பலருக்கு மாறாமலும் இருக்கலாம்.அவர்கள் தங்களை இருபாலீர்ப்பாளராகக் கருதுகிறார்கள்/உணர்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம்.எந்த கட்சி என்ற கேள்வியின் அடிப்படையைத்தான் அவர்கள் எதிர்க்கிறார்கள்.அவர்களின் உண்மையான உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு இந்தப் பெயரீடு.

No comments: