Wednesday, February 14, 2007

இந்தியாவில் மாறுபட்ட பாலீர்ப்பு உரிமை இயக்கத்தின் சரித்திரம் - 1

இந்தியாவில் மாறுபட்ட பாலீர்ப்பு உரிமை இயக்கத்தின் சரித்திரம் சமூகவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்தியாவில் இவ்வியக்கம் இளமையானது. 1990களில் தான் முதல் சில அடிகள் வைக்கப்பட்டன.

1941

இஸ்மாத் சுக்தாயின் லிகாப் என்ற சிறுகதை பிரசுரிக்கப்பட்டது.இதில் பெண்களுக்கிடையே முதன் முதலில் உறவு சித்தரிக்கப்பட்டது.அரசாஙகம் அதன் மேல் ஆபாசக் குற்றச்சாட்டு இட்டது.ஆனால் நீதிபதியால் ரத்து செய்யப்பட்டது



1978



சகுந்தலா தேவியின் "ஓரினச்சேர்க்கையாளர்களின் உலகம்" ( The world of homosexuals) என்ற புத்தகம் பிரசுரிக்கப்பட்டது.இந்தியாவின் கண்ணோட்டத்தில் ஓரினச்சேர்க்கை பற்றி முதன் முதலில் பேசிய புத்தகம் இது.



1979-1980

கல்கத்தாவில் 'கே சீன்' என்ற பத்திரிகை தொடங்கப்பட்டது.சில இதழ்களே வெளிவந்தன.இதை தொடங்கியவர்கள் பற்றிய விவரம் தெரிய வரவில்லை.

March 19. 1979







சதீஷ் அலேகர் எழுதி இயக்கிய 'பேகம் பார்வே' என்ற நாடகம் முதன் முதலில் பூனே அகாடமியால், தில்லியில் அரங்கேறியது.பெண்ணாக வாழ விரும்பும் ஒரு ஆணின் கதை இது.80 களிலும் ,90களிலும் குஜராத்தியிலும் இந்தியிலும் அரங்கேறியது.

70-80s

ஆனந்த் நடகர்னி எழுதிய பார்ட்னர் என்ற ஒரு பகுதி நாடகம்.இது விடுதியில் தங்கும் இரு ஆண்களுக்கிடையே தொடங்கிய உறவு ஒருவன் திருமணத்திற்கு பின்னர் தோன்றும் குழப்பங்கள் பற்றியது.

August 15th 1981


விஜய் டெண்டுல்கர் எழுதிய 'மித்ராசி கோஷ்ட்' என்ற நாடகம்.இது தான் லெச்பியன் என்று அறியும் ஒரு பெண்ணின் உள்ளுணர்வுகளைப் பற்றியது.
1990
இந்தியாவில் மாறுபட்ட பாலீர்ப்பாளர்களுக்கான முதல் பத்திரிகை பாம்பே தோஸ்த் வெளிவந்தது.
1993
எய்ட்ஸ் பேத்பாவ் விரோதி ஆந்தோலன் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைக்காகவும் காவல்துறையின் அத்துமீறலையும் எதிர்த்து குரல் கொடுத்தது
1997
அம்ஜின்சி மும்பையில் மாநாடு நடத்தியது,மாறுபட்ட பாலீர்ப்பாளர்கலின் உரிமை பற்றிய அம்ஜின்சி என்ற தொகுப்பை வெளியிட்டது.