Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Friday, January 26, 2007

Definitions

பால் (Sex)

இது பிறப்பில் தோன்றிய உடற்கூறு சார்ந்த வேறுபாடு.

பாலினம் (Gender)

ஆண் தன்மை அல்லது பெண் தன்மை. பாலினம் என்பது ஒருவர் தன்னை அடையாளம்
காண உபயோகிக்கும் சொல்.

உதாரணம்:
சமூகம் 'வலிமை', 'வீரம்' போன்றவற்றை ஆண்தன்மையோடு இணைக்கிறது.
'மென்மை' போன்றவற்றை பெண்தன்மையோடு இணைக்கிறது.

பால் ஈர்ப்பு: (Sexual Attraction/ Sexuality)

இது பாலியல் ரீதியாக ஏற்படும் ஈர்ப்பு.

பாலுறவு நடத்தை: ( Sexual Behavior)

நடைமுறையில் ஒருவர் யாருடன் பாலுறவு கொள்கிறார்கள். அதாவது ஆண் மற்றும்/அல்லது பெண், அறவாணிகளூடன்.

பாலுறவு அடையாளம் : ( Sexual identity)

ஒருவர் தம்மை எப்படி அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். உதாரணம்: கோதி, DD, அறவாணி..


ஓரினச்சேர்க்கை ( Homosexuality )

ஆண்களுடன் பாலீர்ப்பு உடைய ஆண்கள், பெண்களிடன் பாலீர்ப்பு உள்ள பெண்கள், (ஓரினச்சேர்க்கையாளர்)

இருபாலீர்ப்பு/ (Bisexuality)

மற்றும் ஆண்/பெண் இருவருடனும் பாலீர்ப்பு உடையவர்கள் (இருபாலீர்ப்பாளர்கள்)

பலபாலீர்ப்பு / Pansexuality

மற்றும் சிலர் ஆண்/பெண் என்னும் வேறுபாட்டைக் கடந்த பாலீர்ப்பு கோ


ட்ரான்ஸ்ஜெண்டர்: / Transgender

தங்களது பிறப்பு ரீதியான பாலும், பாலினத்தன்மையும் மாறுபட்டதாக உணர்பவர்கள்.

உதாரணம் : தான் பெண் என்று மன அளவில் நம்பும் ஆண்கள் இது சில சமயம் ட்ரான்ஸெக்சுவல் என்பதையும் சேர்த்துச் சொல்லும் கூட்டுச்சொல்லாகவும் பயன்படுகிறது.

ட்ரான்ஸ்செக்சுவல் / Transexual

பிறப்பால் ஒரு பாலும், மன அளவில் வேறு பாலினத்துடன் அடையாளம் காண்பவர்கள், மற்றும் இந்த வேறுபாடை மாற்ற அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர்கள்.

Monday, October 23, 2006

இ.பி.சி பிரிவு 377 - ஒரு அறிமுகம்


இபிசி பிரிவு 377 என்றால் என்ன? ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற ஒரு ஏட்டுச்சுரைக்காயா? அல்லது அப்பாவி இளைஞர்களிடம் அராஜகம் செய்து வசூல் செய்ய போலீசுக்கு ஒரு வழியா? எது எப்படி இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் பல்லாயிரம் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இது ஒரு நிஜம் - நீக்கப்படவேண்டிய நிஜம். அப்படி என்ன தான் சொல்கிறது இந்தப்பிரிவு???

377. Unnatural offences
Whoever voluntarily has carnal intercourse against the order of nature with any man, woman or animal, shall be punished with 152[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.
Explanation- Penetration is sufficient to constitute the carnal intercourse necessary to the offence described in this section.


அதாவது யாராவது தன்னிச்சையாக, எந்தவொரு ஆண், பெண் அல்லது மிருகத்துடன் இயற்கையை மீறிய பாலுறவு.. வைத்துக்கொண்டால் ஆயுள்கால சிறை தண்டனையோ (அல்லது அந்த காலகட்டம் 10 வருடங்கள்) மற்றும் கண்டனத்தொகை விதிக்கப்படுவார்கள். இதற்கு உட்செலுத்துதல் சாட்சியாக ஏற்கப்படுகிறது..

பிரிவு 377 மாறுபட்ட பாலீர்ப்பாளர்களின் அடிப்படை உரிமையை குற்றமாகக் காட்டுகிறது.வரலாற்று ரீதியாக இதைப் பார்த்தோமானால் 1837-ல ஆன்கிலேயர்கள் ஆட்சியில் லார்டு. மகாலேயால் போடப்பட்டது. இன்கிலாந்தில் 1967-ல இந்த சட்டம் நீக்கப்பட்டது.ஆனால் இந்தியாவில் இன்னும் இந்தச்சட்டம் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது.

திசம்பர் 2001-இல் HIV AIDS தொடர்பான சமூகப்பணி மேற்கோன்டு வரும் நாஜ் பவுண்டேசன் தில்லி ஐ கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தது.வயது வந்தவர்கள் சம்மதத்துடன் ஈடுபடும்செய்கைகளை குற்றப்படுத்த வேண்டாம் என்பதே அந்த கோரிக்கை.இந்திய சட்டக்க்குழு தனது 172வது ரிப்போர்ட்டில் இந்தப்பிரிவை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

Thursday, October 05, 2006

கின்ஸி அளவுகோல்

பாலீர்ப்பை அளக்க கின்ஸி அளவுகோல் உபயோகப்படுத்தப்படுகிறது.

0 - ப்ரத்யேகமாக பிறபாலீர்ப்பு
6 - ப்ரத்யேகமாக தற்பாலீர்ப்பு


இது முதன்முதலில் 1948ஆம் ஆண்டு ஆல்பிரட் கின்ஸி, வார்டெல் பாமெராய்
மற்றும் சிலர் "ஆண்களில் பால்சார்ந்த நடவடிக்கைகள்" என்ற தலைப்பில்
பிரசுரிக்கப்பட்டது. கின்ஸி இதில்,

ஆண்களை தற்பாலீர்ப்பாளர்கள், பிறபாலீர்ப்பாளர்கள் என்று இரண்டு தனிகத்தனிக்
குழுக்களாகப் பிரிக்க இயலாது.இவ்வுலகத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு தொடர்ச்சியைக் காண்கிறோம்.

அவரது அளவுகோல் பின்வருமாறு

0 - ப்ரத்யேகமாக பிறபாலீர்ப்பு
1 - ப்ரத்யேகமாக பிறபாலீர்ப்பு, சிற்சில சமயம் தற்பாலீர்ப்பு
2 - ப்ரத்யேகமாக பிறபாலீர்ப்பு ,சிற்சில சமயத்தை விட அதிகம் தற்பாலீர்ப்பு
3 - சம அளவில் பிறபாலீர்ப்பும் தற்பாலீர்ப்பும்
4 - ப்ரத்யேகமாக தற்பாலீர்ப்பு ,சிற்சில சமயத்தை விட அதிகம் பிறபாலீர்ப்பு
5 - ப்ரத்யேகமாக தற்பாலீர்ப்பு சிற்சில சமயம் பிறபாலீர்ப்பு
6 - ப்ரத்யேகமாக தற்பாலீர்ப்பு


இருபாலீர்ப்பு - ஒரு அறிமுகம்

இருபாலீர்ப்பு - ஒரு அறிமுகம் மற்றும் சில தவறான கண்ணோட்டங்கள்.

  • இருபாலீர்ப்பு என்றால் என்ன?

    இருபாலார் மீதும் ஏற்படும் ஈர்ப்பு/பாலுணர்ச்சியே இருபாலீர்ப்பு.இது ஒரே நேரத்தில் ஏற்படும் என்று அல்ல.இந்த ஈர்ப்பு ஒருவரின் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டத்தில் மாற்றம் ஏற்படலாம்..
  • இருபாலீர்ப்பு உள்ளவர்கள் ஒருதாரம் என்ற அடிப்படை கோட்பாடை தகர்க்கிறார்களே?

    ஈர்க்கப்படும் அடிப்படை தன்மை/உணர்ச்சி வேறு, நடவடிக்கை , நடைமுறை என்பது வேறு. எதிர்பால் உறவு, ஒரின உறவு என்று பல உறவுகளில்,ஜோடிகளில் இது போன்ற இருபாலீர்ப்பாளர்களைக் காணலாம்.இருபாலீர்ப்பாளர் என்றாலே பல-தாரம் என்ற முடிவுக்கு வருவது மிகத்தவறு.ஒரே வாழ்க்கைத்துணையுடன் நீண்ட நாள் வாழும் இருபாலீர்ப்பாளரும் உண்டு.சிலர் serial monogamy (தொடர்ச்சி-ஒரு தாரம்) போன்ற வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பர்.ஆண்-பெண் உறவில் இருப்பது போலவே பல-தாரம் (polygamy) வாழ்க்கை முறையைக் கடைபிடிப்போரும் உண்டு.இது ஒருவருக்கொருவர் வேறுபடும்.
  • இவர்கள் குழம்பியவர்கள்.எந்த கட்சி என்று சேரமுடியாமல் முடிவுக்கு வரமுடியாமல் தவிப்பவர்கள்.

    இவர்கள் வாழ்க்கைத்துணையைத் தேடுகையில் பால் என்ற பாகுபாடின்றி தேடுவதே அன்றி உணர்ச்சி அளவில் எல்லோரையும் போலத்தான்.பாலுணர்வு, நாட்டம் எல்லாம் ஒருவரின் வாழ்க்கையில் மாற்ற்ம் இல்லாமல் இருப்பதில்லை என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். வாழ்க்கையின் மாற்றங்களோடு இவ்வுணர்வுகளும் மாறலாம்.பலருக்கு மாறாமலும் இருக்கலாம்.அவர்கள் தங்களை இருபாலீர்ப்பாளராகக் கருதுகிறார்கள்/உணர்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம்.எந்த கட்சி என்ற கேள்வியின் அடிப்படையைத்தான் அவர்கள் எதிர்க்கிறார்கள்.அவர்களின் உண்மையான உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு இந்தப் பெயரீடு.

Wednesday, October 04, 2006

மாறுபட்ட பாலீர்ப்பு - பெற்றோர்களுக்கு சில குறிப்புகள்

மாறுபட்ட பாலீர்ப்பு/தற்பால் நாட்டம் உள்ளவர்களின் பெற்றோர்களுக்கு சில குறிப்புகள்

  • எனக்குத் தெரிந்த சாமியார்/மந்திரவாதி /குறிசொல்பவர் /மூலிகை வைத்தியர்/ மருத்துவர் இருக்கிறார்.அவர் இதை எல்லாம் குணப்படுத்தி விடுவார்.

இப்படி எல்லாம் உங்களுக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நலம்விரும்பிகள் சொல்லக்கூடும்.அல்லது நீங்களே இந்த முடிவுக்கு வரலாம்.முதலில் இது ஒரு வியாதி அல்ல ஒரு மாறுபட்ட பாலீர்ப்பு.வல்லுனர்கள் இதன் காரணம் மரபணுக்களா, சூழலா, அல்லது அவரவர் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையா என்ற முடிவு கிடைக்கவில்லை.ஆனாலும் உலக உடல்நல நிறுவனம் (World Health Organization), மற்றும் உலக அளவில் பல மனோதத்துவ நிபுணர்களும் மாறுபட்ட பாலீர்ப்பு,மற்றும் தற்பால்/ஓரின நாட்டம் இவை வியாதிகளோ உடற்கோளாறோ அல்ல என்று அறிவித்து விட்டனர்

  • இது நமது கலாச்சாரம் அல்ல.மேற்கத்தியர்களின் கலாச்சாரம்.இதனால் கலாச்சார சீர்கேடு தான் விளையும்.கண்ட புத்தகங்கள்/திரைப்படங்கள்/ நண்பர் சகவாசம் தான் இதற்குக் காரணம்.

நமது இதிகாசங்களில் இருந்த சிகண்டியும், வங்காள க்ரித்திவாச ராமாயணத்தில் இருபெண்களின் சேர்க்கையால் உண்டாகும் பகீரதனின் பிறப்பும், மோகினி வடிவில் இருந்த விஷ்ணுவின் பால் சிவனுக்கு ஏற்பட்ட ஈர்ப்புக்கு என்ன பெயர் கொடுக்கப் போகிறீர்கள்? காஜுராஹோவிலும் இன்னும் இத்தகைய உறவு முறைகளை வெளிப்படுத்தும் பல சிற்பங்கள் இருக்கின்றன.இது பற்றி மேலும் படிக்க விரும்பினால் ருத் வனிதா மற்றும் சலீம் கிட்வாயின் , சேம் செக்ஸ் லவ் இன் ஏன்சியண்ட் இந்தியா என்ற புத்த்கத்தைப் பாருங்கள் (Same Sex Love in Ancient India, Ruth Vanitha and Saleem Kidwai)

  • இதனால் என் மகனுக்கு எய்ட்ஸ் நோய் வந்து விடுமா? ஓரினச்சேர்க்கையால் இந்நோய் பரவும் என்று படித்திருக்கிறேனே?

தற்பாலாக இருந்தாலும் சரி எதிர்பால் உறவாக இருந்தாலும் சரி பாதுகாப்பற்ற் உடலுறவால் பரவுவதே எய்ட்ஸ் மற்றும் HIV..தகவல்களின் படி பார்த்தால் இந்தியாவில் பல தார உறவு/பல பெண்களுடன் பாதுகாப்பற்றா உடலுறவால் எச்.ஐ.வியால் பாதிக்கப்படும்ஆண்கள் எண்ணிக்கை அதிகம்.இது பற்றி உங்களுக்குக் கவலை இருக்குமேயானால் உங்கள் மகன் அல்லது மகளிடம் பாதுகாப்பான உடலுறவைப்பற்றி நிச்சயம் பேசுங்கள்.அவர்களும் நீங்களும் திறந்த மனத்துடன் பேசினால் இருவருமே தெளிவடைவீர்கள்.

  • சரி என் மகன்/மகளின் வாழ்க்கை முறையை நான் ஏற்றுக்கொண்டு விட்டேன்.ஆனால் சமூகம்? ஆர்ட்டிக்கிள் 377 இவர்களை குற்றவாளிகள் ஆக்குகிறதே? என் மகனை காப்பது எப்படி?

பெற்றோரான உங்களுக்கு இது மிகவும் நியாயமான கவலை தான்.இரு நூறு வருடங்களுக்கு முன் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கவில்லை. ஜாதிக்கேற்ப தான் பள்ளிகளில் அனுமதி.அவையெல்லாம் மாறியது போல இதுவும் மாறும். பொருளாதார வல்லுனர் அமார்த்த்யா சென், எழுத்தாளர் அருந்ததி ராய், விக்ரம் சேத் போன்ற பலர் அரசாங்கத்தில் பிரிட்டிஷ் பாரம்பரியமான மனித உரிமை மீறலுக்கு இடம் அளிக்கும் இந்த ச்ட்டத்தை ஒழிக்க மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

  • திருமணம் மற்றும் குழந்தைகள், வம்ச விருத்தி??

அவர்கள் நல்வாழ்விற்கு முதல் படி நீங்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணையையும், வாழ்க்கை முறையையும் மதிக்கவேண்டும். வாழ்க்கைத்துணையை நண்பர் என்று அறிமுகப்படுத்தும் பொய்யான நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தாதீர்கள். தத்தெடுத்து வளர்த்த இந்தியாவில் பல லட்சம் குழந்தைகள் உள்ளனர்.உங்கள் மகன் / மகள் அன்பிற்காக ஏங்கும் அத்தகைய குழந்தைகு நல்ல தாய்/தந்தையாக ஏன் விளங்கக்கூடாது?